இந்தியாவின் சந்திரன் மிஷன் - சந்திரயான் -2 இலக்குப் பாதையை அடைய, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில் உள்ள சந்திரநாதர் கோயிலில் (கைலாசநாதர் கோயில்) சிறப்பு பிரார்த்தனைகள் இன்று நடைபெற்றன. தமிழகத்திலுள்ள வழிபாட்டுத் தலங்களில் பிரசித்திபெற்ற ஒன்றாக இந்த கோயில் அறியப்படுகிறது.
இந்த கோயிலில் சோமா எனப்படும் சந்திரனுக்கு சிறப்பு பிராத்தனைக்காக இன்று வெள்ளை மலர்களுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. சந்திராயன் 2 ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று எவ்வித தடங்கலுமின்றி சந்தியான் 2 திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படுவதற்காகவே இந்த சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அதேபோல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலையிலும், கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள கிருஷ்ணா மடத்தையும் பார்வையிட்டு எவ்வித தடங்கலுமின்றி சந்தியான் 2 திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படுவதற்காக வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.