ETV Bharat / state

பைக் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு! - கார்-பைக் மோதி விபத்து

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

thirukattupalli
thirukattupalli
author img

By

Published : Dec 10, 2020, 6:59 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:

திருவையாறு மேலவட்டத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் பட்டாபிராமன் (45). இவர் நேற்று (டிச. 09) தனது இருசக்கர வாகனத்தில் திருச்சியில் துக்க காரியத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது திருச்சென்னம்பூண்டி இளங்காட்டுப்படுக்கை அருகே எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக இவரது வாகனத்தில் மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவரது உறவினர் நல்லேந்திரன் தோகூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் ஸ்ரீதேவி இது குறித்து விசாரணைமேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திருமண செய்ய முடிவு: பிளஸ் டூ மாணவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.