ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயில் சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடு.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - Sani Pradosham

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஸ்ரீ ருத்ர ஹோமம், மஹா தீபாரதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

sani pradosham
சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடு
author img

By

Published : Jul 15, 2023, 10:56 PM IST

பெரிய கோயில் சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ பெருவுடையார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்து கோயிலின் கட்டிடக் கலையை வியந்து பார்த்து செல்கின்றனர்.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் வீற்றிருக்கும் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இன்று ஜூலை 15ஆம் தேதி ஆனி மாதம் சனி பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்தியம் பெருமானுக்கு வீபூதி, அரிசி மாவு பொடி, திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, தேன், பழ வகைகள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், அருகம்புல், வில்வ இலை பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. மேலும், பெருவுடையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மஹாநந்தியம் பெருமானை வழிபட்டனர்.

இதேபோல் தஞ்சையை அடுத்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான கரந்தை அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை வசிஷ்டேஸ்வர சுவாமி (எ) கருணா சுவாமி திருக்கோயிலில் சனிப்பிரதோஷ ஸ்ரீ ருத்ர ஹோமம் மற்றும் நந்திக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்னப்பச்சி வாகனத்தில் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

பின்னர், கடத்திற்கு சிவாச்சாரியார்களால் கணபதி பூஜை செய்து வேதமந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் ஹோமம் வளர்த்து முடிவில் பூர்ணாஹீதி நடைபெற்று அதனை தொடர்ந்து மஹா தீபாரதனை காட்டப்பட்டது. மேலும், நந்திக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. கரந்தை கருணா சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதோஷம் அன்று நந்தியம் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும், கல்வி செல்வம் பெருகும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் சனி பிரதோஷம் என்பதால் மிகவும் விசேஷமானது ஆகவே இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டனர்.

இதையும் படிங்க:கலைஞர் நூற்றாண்டு விழா: நிலக்கோட்டை அருகே களைகட்டிய கிடா முட்டு போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.