ETV Bharat / state

'சுவாமியே சரணம்' சாப்பாட்டு இலைகள் மீது அங்கப்பிரதட்சிணம்! - alms Ayyappa devotees in Tanjavur

தஞ்சாவூரில் ஐயப்ப பக்தர்கள் அன்னதானம் நடந்த நிலையில், சாப்பிட்ட இலைகளில் அங்கப்பிரதட்சிணம் செய்து வழிபாடு செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 18, 2022, 10:53 PM IST

'சுவாமியே சரணம்' சாப்பாட்டு இலைகள் மீது அங்கப்பிரதட்சிணம்!

தஞ்சாவூர்: கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்து சபரிமலை செல்வது வழக்கம், அதற்கு முன்னதாக பல்வேறு இடங்களில் பூஜைகள் செய்து வழிபாடும் செய்து அன்னதானமும் ஐயப்ப பக்தர்கள் செய்வர்.

இந்நிலையில் தஞ்சையில் அமைந்துள்ள ஸ்ரீ தான்தோன்றி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் பரிவார தெய்வமாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இதனையடுத்து ஐயப்பனுக்கு இன்று (டிச.18) முப்பதாம் ஆண்டு மணிவிழா பூஜையை முன்னிட்டு 1008 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அபிஷேகம் நடைப்பெற்றது.

தொடர்ந்து சரண கோஷத்துடன், 18 படிகளில் தீபம் ஏற்றி ஐயப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்ட இலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.

இதையும் படிங்க: சீர்காழியில் 28ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.