தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் இன்று (செப்டம்பர் 5) ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தஞ்சை மாவட்டத்தில் கரோனாவால் மொத்தம் 7ஆயிரத்து 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இன்று மட்டும் 91 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 4 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனாவால் இதுவரை 120 பேர் உயிரிழந்தனர்.