ETV Bharat / state

பதநீர் விற்பனை பாதிப்பு - பனை மரத் தொழிலாளர்கள் வேதனை - தென்காசி மாவட்ட பனை மரத் தொழிலாளர்கள்

தென்காசி: கோடைக்காலம் என்பதால் அதிக விளைச்சல் இருந்தும் பதநீர், நுங்குகளை விற்பனை செய்ய முடியாமல் பனை தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.

பனை மரத் தொழிலாளர்கள் வேதனை
பனை மரத் தொழிலாளர்கள் வேதனை
author img

By

Published : Apr 23, 2020, 11:39 AM IST

தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கோடைக்காலம் பதநீர் சீசன் என்றாலும்கூட, கரோனா ஊரடங்கால் பதநீர், நுங்கு விற்பனை செய்ய முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை சுரண்டை பகுதியில் அதிக பனைமர தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்தவுடன் பனை மரத்தில் ஏறி பதநீர் எடுத்து அதை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். லிட்டர் அளவை பொறுத்து பதநீருக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பனை மரத் தொழிலாளர்கள் வேதனை

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்தான் அதிகளவில் நுங்குகளை வாங்கி செல்வார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவால் தெருக்களுக்கு சென்று பதநீர் நுங்குகளை விற்பனை செய்ய முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

உணவு சார்ந்த பொருட்கள் என்பதால் அதனை விற்க தடை இல்லை என்றாலும் பதநீர் விற்பனை செய்ய காவல் துறை கெடுபிடி காட்டுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பனை தொழிலாளி முத்தையா கூறுகையில், ’40 வருடங்களாக பதநீர் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். தற்போது ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லிட்டர் ரூ.50க்கு விற்பனை செய்கிறோம்’ என்றார்

இதேபோல் வியாபாரி நாகராஜ் கூறுகையில், ’தற்போது சீசன் என்பதால் விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால் ஊரடங்கால் பதநீர் சரிவர விற்பனையாகவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் விற்பனை குறைந்துள்ளது. பதநீரை பொறுத்தவரை ஆண்டுக்கு ஆறு மாதங்கள்தான் விளைச்சல் இருக்கும். தற்போது விளைச்சல் இருந்தும் கடந்த இரண்டு மாதங்களாக வியாபாரம் இல்லை எனவே பொதுமக்களிடம் பயமின்றி பதநீர் விற்பனை செய்ய காவல் துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாஸ்க் தயாரிக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.