தென்காசி: கடையநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடனாநதி அமைந்துள்ளது. இதைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் உயிரிழந்து எலும்புக்கூடான நிலையில் இருந்த யானையின் சடலத்தை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று (ஜூலை.15) மாவட்ட வன அலுவலர், வன கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இறந்த யானையை உடற்கூராய்வு செய்தனர்.