private spinning mill: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி தொகையை உடனே வழங்கக் கோரி இன்று ஐந்தாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக மதிமுக, சிஐடியு உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கின. இதனால் அங்கு 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: மாரிதாஸ் மீது வழக்குத் தொடுத்த திமுக நிர்வாகிக்கு நோட்டீஸ்!