ETV Bharat / state

விநாயகர் சிலை செய்யும் பாஜக பிரமுகரை அவதூறாக பேசிய காவல்துறையினர்... வைரலாகும் வீடியோ! - தென்காசி மாவட்ட செய்தி

Viral video: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் இடங்களில் காவல்துறையினர் இடையூறு செய்வதாகவும், உரிமையாளர்களை அவதூறாக பேசுவதாக வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 5:05 PM IST

விநாயகர் சிலை செய்யும் பாஜக பிரமுகரை அவதூறாக பேசிய காவல்துறையினர்

தென்காசி மாவட்டம் முழுவதும் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோயில்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த விநாயகர் சிலைகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் தயாரிக்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாக, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்து உள்ள காலங்கரை பகுதியில் முருகன் என்பவர் விநாயகர் சிலை செய்து வருவதாக காவல்துறைக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தென்காசி துணைக் காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதில் விநாயகர் சிலை செய்யும் முருகன் என்பவரை காவல் துறையினர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், ”தான் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதால் காவல்துறையினர் தன் தொழிலை முடக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகளை கிழங்கு மாவு, பேப்பர்கூழ், ஆகியவற்றை பயன்படுத்தி 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல மாடல்களில் செய்து வருகின்றேன்.

ஆனால் காவல்துறையினர் தன் தொழிலை முடக்கும் நோக்கத்தில் தன் மீது போலியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பேன் என மிரட்டி வருகின்றனர். மேலும் என்னை அநாகரிமான வார்த்தைகளால் பேசி உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார். தவறும் பட்சத்தில் தான் இனி தொழில் செய்வதில்லை எனவும், விற்பனைக்காக செய்து வைத்துள்ள விநாயகர் சிலைகள் அனைத்தையும் தானே ஆற்றில் கரைத்து விடுவதாகவும் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களை அநாகரிமாக பேசுவது தொடர்கதையாகவே உள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய காவல்துறையினர் தற்போது தென்காசி மாவட்ட பொதுமக்களை அநாகரிமாக பேசுவது அதிகரித்துள்ளது. இதனால் வேலை செய்யும் தொழிலாளர்களும் அன்றாடம் கூலி தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர்

இதையும் படிங்க: "அரைகுறை பணிக்கு ரூபாய் ஒரு கோடியா?" - தென்காசி ஆய்வில் உறுதிமொழி குழு பகீர் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.