தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையின்றி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தற்போது கரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார், அப்போது அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ரத்தம் வழங்க யாரும் மருத்துவமனைக்கு வர முடியாத சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்த தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கார்த்திக் (34) உடனடியாக அரசு மருத்துவனைக்கு சென்று கர்ப்பிணிக்கு ரத்தம் வழங்க சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக கார்த்திக்கிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு கர்ப்பிணிக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பணியில் இருந்த காவலர் தக்க நேரத்தில் ரத்தம் வழங்கி உதவிய சம்பவம் அங்கிருந்தவர்களிடம் பாராட்டை பெற்றது.
இதையும் படிங்க:
கரோனா நோய் தொற்றுள்ள கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை உறவினர்களிடம் ஒப்படைப்பு!