ETV Bharat / state

வறண்ட குற்றாலம் அருவி.. பாறைகளில் மறைந்திருந்த சிலைகள்.. வைரலாகும் வீடியோ!

குற்றால அருவியில் முற்றிலுமாக வறண்டு நீர் இல்லாத நிலையில், வெளிப்படையாக தெரியும் சுவாமி சிலைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

kutralam waterfalls
வறண்டு போன குற்றால அருவி
author img

By

Published : May 24, 2023, 12:17 PM IST

Updated : May 25, 2023, 1:43 PM IST

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குற்றால அருவியானது இயற்கை எழில் கொஞ்சும் அழகும், ஆன்மிக வரலாறு உடைய நீர்வீழ்ச்சியாகும். குறிப்பாக, தற்போதைய தலைமுறையினருக்க குற்றாலம் என்றால் அது ஒரு சுற்றுலா தளம், குளிப்பதற்கு இதமான உள்ள ஒரு அருவி என்று தான் தெரியும். ஆனால் குற்றாலம் என்றால் புராணத்தில் தெய்வீக பூமி என்று இன்னொரு வரலாரும் உள்ளது.

குறிப்பாக தென் பொதிகை மலையில் உள்ள குற்றாலத்தில் அகஸ்தியர் உள்ளிட்ட பல்வேறு முனிவர்கள் வாழ்ந்ததாகவும், அவர்கள் தினமும் குற்றால அருவி கரையில் புனித நீராடி அங்கே அமர்ந்து தியானங்களில் ஈடுபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதற்கு சான்றாய் பல்வேறு சாட்சியங்கள் உள்ள சூழலில், தற்போது குற்றால அருவியானது ஆன்மீக வழிபாட்டு தளமாக இருந்ததற்கான சான்றுகள் வெளிப்படையாகியுள்ளது.

குறிப்பாக, வருடம் தோறும் குற்றாலம் அருவியில் நீர் குறையாமல் கொட்டி வரும் சூழலில், கடந்த சில மாதங்களாக தென்காசி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோடை மழை கூட பெய்யாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றால அருவியானது தற்போது வறண்டு ஒரு சொட்டு நீர் கூட அருவியில் கொட்டாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும், நீர் கொட்டி வரும் குற்றால அருவிக்கு உட்பகுதியில் உள்ள காட்சிகளை சுற்றுலா பயணிகளோ, அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களோ பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இதையும் படிங்க: Video: பழைய குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை மீட்ட இளைஞர்!

இந்த நிலையில், தற்போது முழுவதுமாக வறண்டு ஒரு சொட்டு நீர் கூட வழியாத குற்றால அருவியின் பின்புற பகுதியில் ஏராளமான சுவாமி சிலைகளும், சிவலிங்க வடிவிலான பிரதிஷ்டைகளும் காணப்பட்டு வருகின்றன. ஆன்மீக பூமி குற்றாலம் என்று புராணங்கள் கூறிவரும் நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில் குற்றால அருவிகளில் பல்வேறு வடிவிலான சுவாமி சிலைகளும், குற்றால அருவியில் இருந்து நாள்தோறும் புனித நீர் எடுத்துச் சென்று குற்றால நாதருக்கு அபிஷேகங்கள் செய்யும் வழக்கமும் சான்றாக தற்போது வெளிப்படையாகியுள்ளது.

மேலும், தற்போது முற்றிலுமாக வறண்டு காணப்படும் குற்றால அருவியில் தெய்வங்களாக காட்சி அளிக்கும் சிவலிங்க சிலைகள் உள்ளிட்ட சுவாமி சிலைகளின் காட்சிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் ஆச்சரியத்தையும், குற்றாலத்தின் ஆன்மீக வரலாற்றையும் எடுத்துரைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'புதியன விரும்பு' 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை சிறப்பு வகுப்புகள்!

Last Updated : May 25, 2023, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.