கீழப்பாவூர் கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைப்பப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிராமத்தில் உள்ள சந்தன தெரு, பாரதியார் தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சந்தன முத்துவீரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதியினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிடக்கோரியும், வேறு இடத்திற்கு மாற்றியமைக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:#Exclusive தற்காப்புக்காக கொலைசெய்த இளம்பெண்ணை விடுதலைசெய்த எஸ்.பி.