ETV Bharat / state

சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 40 வயது பெண் யானை உயிரிழப்பு - forty year old elephant died under treatment

வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உடல் நலம் குறைந்த 40 வயது மதிக்கத்தக்க யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.

சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 40 வயது பெண்யானை ஒன்று உயிரிழந்தது

author img

By

Published : Nov 21, 2022, 4:49 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் யானை, மிளா மான், காட்டெருமை உள்ளிட்டவை அதிகமாக உள்ளது.

அப்பகுதியில் வனச்சரக பணியாளர்களின் ரோந்துப்பணியின்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்யானை, வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தலையணை அருவியில் நோய் வாய்ப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு திருநெல்வேலி மாவட்ட வன அலுவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவில் நேற்று (நவ.20) களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன கால்நடை உதவி மருத்துவர் மனோகரன் அவர்களது குழு, திருநெல்வேலி கால்நடை மருத்துவகல்லூரி துறை தலைவர் மருத்துவர் முத்துகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார், உதவி மருத்துவர் கருப்பையா ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் முதல்கட்ட மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டனர்.

மேலும் நோய்வாய்ப்பட்டிருந்த பெண் யானைக்கு சிகிச்சையின் தொடர்ச்சியாக பழங்களும், மண்டை வெல்லமும், தென்னை இலையும் அளிக்கப்பட்டது. பெண் யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். பிறகு யானைக்கு ஊசிகள் போடப்பட்டு குளுக்கோஸ்களும் ஏற்றப்பட்டது.

சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 40 வயது பெண் யானை உயிரிழப்பு

அதனைத்தொடர்ந்து இன்று (நவ.21) அதிகாலையில் வனத்துறையினர் யானையைப் பார்க்கும்போது யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கால்நடை மருத்துவர் குழுவினர் உடற்கூராய்வு செய்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உடற்கூராய்வுக்குப் பின்பு தான் யானையின் இறப்பு குறித்த காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மகளுக்கு கோவில் கட்டி வழிபடும் தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.