தென்காசி : குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் 2-ஆம் நாள் நிகழ்ச்சியாக மலர் மற்றும் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொழு கொழு குழந்தை போட்டி நடைபெற்றது.
பின்னர் கால்நடை துறை சார்பில் நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் தென்காசி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி , நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இருந்து 220 நாய்கள் கலந்து கொண்டன. இந்த கண்காட்சியில் கன்னி, சிப்பிப் பாறை, கோம்பை, ஜெர்மன் ஷேப்பர்டு, லேபரேடார், பொமேரினியன் உட்பட 24 வகையான நாய்கள் கலந்து கொண்டது.
நாட்டினம் மற்றும் அயலின வகை களில் போட்டி நடைபெற்றது. இதில் நாட்டின வகையில் சிதம்பரா புறத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது கன்னி இன நாய் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. அயலின பிரிவில் இலஞ்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் பரிசு வென்றது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நாயின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேரள மாநில கதகளி நிகழ்ச்சியும், கை சிலம்பாட்ட கிராமிய நிகழ்ச்சியும், பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதையும் படிங்க : இடுக்கி அணையில் இருந்து நீர் திறப்பு