ETV Bharat / state

தென்காசியிலிருந்து கேரளாவிற்கு கனிம வளக் கடத்தல் - கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைப்பு! - mineral resources

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்காணிக்க உதவி இயக்குநர் தலைமையிலான சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசியிலிருந்து கேரளாவிற்கு கனிமவள கடத்தல் - கண்காணிக்க தனிப்படை அமைப்பு

author img

By

Published : Apr 6, 2023, 7:13 PM IST

தென்காசியிலிருந்து கேரளாவிற்கு கனிமவள கடத்தல் - கண்காணிக்க தனிப்படை அமைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், ஏராளமான லாரிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கடந்த இரண்டு தினங்களாக தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளை மறித்து ஆவணங்களை சரிப் பார்த்து அனுப்பினர்.

மேலும், சட்ட விரோதமாக அதிக பாரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைப் பிடித்து அபராதமும் விதித்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாகக் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக சிறப்பு தனிப்படையினர் கொண்ட குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், திருச்சியில் பணியாற்றி வந்த கனிம வளத்துறை உதவி இயக்குநர் சத்தியசீலன் தலைமையில், மூன்று பேர் அடங்கிய குழு தென்காசி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கனிமவளத்துறை சிறப்பு தனிப்படையினர் தமிழக - கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர் என்றும்; மேலும், தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகள் அனைத்தையும் முறையான சோதனைக்கு உட்படுத்தி, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னரே அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தகவல் தெரியவருகிறது.

தற்பொழுது கேரளாவிற்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தையும் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சிறப்பு தனிப்படை அதிகாரி சத்தியசீலன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''அத்துமீறி செயல்படும் வாகனங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் கேரள - தமிழக எல்லைப் பகுதியில் வாகனச் சோதனை அதிகரித்து வருகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி ’இந்த நடவடிக்கை தொடரும் எனவும்; சட்ட விரோதமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ எனவும் கனிமவளத்துறை சிறப்பு தனிப்படை அதிகாரி சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ''கோவையில் தான் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கிறது'' - தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம்

இதையும் படிங்க: 'உங்களை பாக்கணும்னு தோணுச்சு'-VJS-யிடம் கியூட்டாக பேசிய குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.