ETV Bharat / state

கொங்கேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி 1008 விளக்குகள் ஏற்றி பூஜை! - prayers for rain

சிவகங்கை: கொங்கேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி பெண்கள் 1008 விளக்குகள் ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.

பெண்கள் பூஜை
author img

By

Published : Aug 15, 2019, 3:55 AM IST

சிவகங்கையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு இக்கோயிலில் இருக்கும் ஏழுமுக காளியம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் வழிபாடு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிளக்கு பூஜை வழிபாடு, சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பூஜை செய்தனர்.

விளக்கு பூஜையில் 1008 சகசரநாம அர்ச்சனை, 108 மகாலட்சுமி, காயத்ரி மந்திரங்கள் கூறி குங்குமம், உதிரிப் பூக்களால் விளக்குக்கு அர்ச்சனை செய்தனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். நிறைவாக திருவிளக்குக்கு தீபாராதனை காட்டி ஏழுமுக அம்மனை வழிபட்டனர்.

Intro:சிவகங்கை

மழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை!

சிவகங்கை அருகே உள்ள சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீகொங்கோஷ்வரர் சுவாமி திருக்கோவிலில் உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் 1008திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

Body:இத்திருக்கோவிலில் ஶ்ரீகொங்கேஷ்வரர் ஶ்ரீஏழுமுக காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஏழுமுக காளியம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிளக்கு பூஜை வழிபாடு சிவாச்சாரியார்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து கணபதி பூஜையுடன் விளக்கு பூஜையை துவங்கினர்.

பிரதான விளக்குக்கு திருவிளக்குக்கு தீபம் ஏற்றியவுடன் அனைவரும் விளக்கு ஏற்றினர். விளக்கு பூஜையில் 1008 சகசரநாம அர்ச்சனை 108 மகாலட்சுமி மற்றும் காயத்திரி மந்திரங்கள் ஜெபித்து குங்குமம் மற்றும் உதிரி பூக்களால் விளக்குக்கு அர்ச்சனை செய்தனர்.

இதில் கலந்துகொண்ட பெண்கள் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

Conclusion:நிறைவாக திருவிளக்குக்கு தீபாராதனை காட்டி ஏழுமுக அம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.