சிவகங்கை அடுத்து உள்ள கிராமம் சோழபுரம் இவ்வூரானது தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நெடுஞ்சாலையை ஒட்டி நாகவள்ளி அம்மன் கோயில், தென்னந்தேவி விநாயகர் ஆலயம், முத்துமாரியம்மன் கோயில் என 3 கோயில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இந்தக் கோயில்களில் நேற்று நள்ளிரவு (மார்ச் 26) புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த அம்மன் தாலியான தங்க நகை, பித்தளை குத்துவிளக்குகள் உள்ளிட்ட பொருள்களை திருடி சென்றதுடன் முத்துமாரியம்மன் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த மினி சி.சி.டி.வி கேமராக்களையும் எடுத்து சென்றுள்ளனர்.
இன்று (மார்ச் 27) காலை வழக்கம்போல் கோயிலை திறக்கவந்த பூசாரிகள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி திருடி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து 3 கோயில்களின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பொருள்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!