சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 125 பேர் வேட்புமனு தாக்கல்செய்து களத்தில் நின்றனர். இதில் 20ஆவது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் 22 வயதேயான பிரியங்கா என்கிற பெண் வேட்பாளர் போட்டியிட்டார்.
இந்த வார்டில் அதிமுக சார்பில் உஷாநந்தினி என்கிற வேட்பாளரும், பாஜக சார்பில் ஹேமாமாலினி என்கிற வேட்பாளரும் களத்தில் நின்ற நிலையில் இன்று சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியில் 20ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் 70 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 51 வாக்குகளும் பெற்ற நிலையில் 22 வயதான இளம் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 797 வாக்குகள் பெற்று 10 மடங்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மாவட்டத்திலேயே முதல் இளம் பெண் வேட்பாளர் வெற்றிபெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வாகை சூடிய கோட்சே சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்!