ETV Bharat / state

'கொலைக்காக சிறைக்குச் செல்லும் முதலமைச்சராக எடப்பாடி இருப்பார்..!' - ஸ்டாலின் அதிரடி - கோடநாடு

சிவகங்கை: "ஊழல் செய்து சிறைக்குப் போனவர் ஜெயலலிதா. கொலைக்காக சிறைக்குச் செல்லும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார்" என, கீழடி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சபைக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின்
author img

By

Published : Feb 5, 2019, 7:56 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று கீழடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசியதாவது,

கல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, அனைவரும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தியது பற்றி ஆச்சரியத்துடன் கேட்டனர். திமுகவில் அந்தளவுக்கு கட்டமைப்பை பலப்படுத்தி இருக்கிறோம். சிறப்பான வழிமுறைகளை வகுத்துக் கொண்டு நடத்துவதில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடிகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வருகிற நாடாளுமன்றத் தேர்தலோடு ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. அதனால் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். 21 சட்டமன்றத் தொகுதிகளில் நானும், பிற தொகுதிகளில் திமுக மூத்த நிர்வாகிகளும் வருகிற பிப்ரவரி 17க்குள் அனைத்து கிராமசபை ஊராட்சிக் கூட்டங்களையும் நடத்தி முடிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.

இந்தக் கீழடியில் கடந்த 2016 முதல் அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரியை வைத்து அகழாய்வுப் பணியை கீழடியில் மத்திய அரசு தொடக்கியது. பின்னர் தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை உலகில் இருந்து மறைக்க, பிரதமர் மோடி அரசு அந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அதிகாரியை மாற்றி, அகழாய்ராச்சிக்குத் தடையை ஏற்படுத்தியது. மறுபடியும் இரு நாட்களுக்கு முன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு, கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடரும் என அறிவித்து இருக்கிறார் பிரதமர்.

அவர் கடந்த வாரம் வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மதுரையில் அடிக்கல் நாட்டினார். அதற்கு நிதி ஒதுக்கினாரா?. தமிழகத்தில் 11 மாநகராட்சிகளை ஸ்மார்ட் சிட்டியாக்குவேன் என்றார்? ஆக்கி விட்டாரா?. சொன்னதை எதையும் அவர் தமிழகத்தில் செய்யவில்லை. சொன்ன திட்டங்கள் எதையும் பிரதமர் மோடி நடைமுறைப் படுத்த வில்லை.

undefined

கலைஞர் 5 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்து விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினர்க்கும் சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். உழவர் சந்தை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் வாரியம், சிமெண்ட் சாலைகள், மினி பஸ் வசதி என எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் திமுக ஆட்சியில் செயல்படுத்தினோம்.

திமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்தோம். சுழல் நிதிகள் கொடுத்தோம். இன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் அநாதையாக இருக்கின்றனர். அவை மாற வேண்டும். அதற்காகத்தான் உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன்.

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ஆறாயிரம் என 3 தவணைகளில் தரப் போகிறோம் என பிரதமர் மோடி அறிவித்திருப்பது திருட்டுத்தனம் தான். உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்திற்கும் ஜிஎஸ்டி வரி போட்டு பணத்தை வசூலித்து, விவசாயிகள் பணத்தையே உதவித் தொகையாக தந்து திருட்டுத் தனம் பண்ணுகிறார் மோடி. அதுவும் இது ஒரு டிரைலர்தான் (Trailor). நான்கரை வருடங்கள் ஆட்சிக்குப் பிறகு பிரதமர் மோடி டிரைலர் விடுகிறார். அதை விட மோசமானவர் தமிழக முதல்வர் எடப்பாடி.

கலைஞர் உடல் நிலை சரியில்லாத போது தினமும் காலையும் மாலையும் உடல் நிலைக் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தோம். ஆனால் ஜெயலலிதாவின் சிகிச்சை மர்மமாகவே இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டு பிடித்து சிறையில் அடைப்போம்.

கலைஞர் இறந்த பிறகு அவரது சமாதியில் காலையும் மாலையும் ஆயிரக்கணக்கானவர் புகழாஞ்சலி செலுத்துகிறார்கள். ஆனால் ஜெயலலிதாவிற்கு அதிமுக அமைச்சர்கள் இதுவரை புகழாஞ்சலி நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்களா?.

undefined

கொடநாடு எஸ்டேட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்க, அங்கே இருக்கும் பென்டிரைவைக் (pendrive) கைப்பற்ற ஐந்து கொலைகளை செய்திருக்கிறார்கள். அதை செய்யச் சொன்னவர் முதல்வர் எடப்பாடி என பகிரங்கமாக குற்றம் சாட்டப்படுகிறது. ஊழல் செய்து சிறைக்குப் போனவர் ஜெயலலிதா. கொலைக்காக சிறைக்குச் செல்லும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், கீழடியின் அகழ்வாராய்ச்சி அறிக்கைப் பெற்ற பிறகு, தமிழகத்திற்கும், உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து, உங்கள் பகுதிக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை வழங்குங்கள்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். உங்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு, உள்ளாட்சித் தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு, உங்கள் கிராமப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை அளித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
05.02.2019

சிவகங்கை மாவட்டம் கீழடியில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியது,

அனைவர்க்கும் வணக்கம். வரலாற்று சிறப்புக்குரிய கீழடி ஊராட்சிக்கு வந்து இருக்கிறேன். கோவிலுக்கு வரும் பக்தன் போல் கிராம ஊராட்சிக்கு வந்து இருக்கிறேன். தமிழகத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் கீழடி ஊராட்சிக்கு வந்து இருக்கிறேன்.

டிவி சீரியல்களைப் பார்ப்பதை விட்டு விட்டு, எங்கள் மேல் நம்பிக்கை வைத்து இருக்கும் தாய்மார்கள் உங்களை வணங்கி வரவேற்கிறேன்.

தமிழகத்தில் உள்ள 12618 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஜனவரி மாதம் 9 ந் தேதி முதன் முதலில் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகள் இடைத் தேர்தல், வருகிற நாடாளுமன்றத் தேர்தலோடு நடக்க இருக்கிறது. இல்லை ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்று எண்ணத் தோன்றுவதால், இது போன்ற ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். 21 சட்டமன்றத் தொகுதிகளில் நானும், பிற தொகுதிகளில் திமுக மூத்த நிர்வாகிகளும் வருகிற பிப்ரவரி 17க்குள் அனைத்து கிராமசபை ஊராட்சிக் கூட்டங்களையும் நடத்தி முடிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.

கல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய எதிர்க்கட்சிகள் மாநாட்டில் போன மாதம் கலந்து கொண்ட போது, அனைவரும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தியது பற்றி ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.

திமுகவில் அந்தளவு கட்டமைப்பு பலப்படுத்தி இருக்கிறோம். சிறப்பான வழிமுறைகளை வகுத்துக் கொண்டு நடத்துவதில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடிகிறது என்றேன்.

இந்த கீழடி மண்ணில் நடப்பதையும் நிற்பதையும் பெருமையாகக் கருதுகிறேன். இங்கேயே வாழும் நீங்கள் பெருமைக்குரியவர்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் நாகரிகம் வரலாற்று முறைக் குறித்துப் பறை சாற்றுகிற கீழடியில் கிராம சபைக் கூட்டம். 

இந்தக் கீழடியில் கடந்த 2016 முதல் அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரியை வைத்து அகழாய்வுப் பணியை கீழடியில் மத்திய அரசு துவக்கியது.

பின்னர் தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை உலகில் இருந்து மறைக்க, பிரதமர் மோடி அரசு அந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அதிகாரியை மாற்றி, அகழாய்ராச்சிக்குத் தடையை ஏற்படுத்தியது.

மறுபடியும் இரு நாட்களுக்கு முன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு, கீழடியில் அகழாய்ராச்சி தொடரும் என அறிவித்து இருக்கிறார் பிரதமர் மோடி.

கடந்த வாரம் வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மதுரையில் அடிக்கல் நாட்டினார். நிதி ஒதுக்கினாரா?

தமிழகத்தில் 11 மாநகராட்சிகளை ஸ்மார்ட் சிட்டியாக்குவேன் என்றார்? ஆக்கி விட்டாரா?

சொன்னதை எதையும் அவர் தமிழகத்தில் செய்யவில்லை.

கலர் கலராகத் தொப்பி போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் பிரதமர் மோடி.

சொன்ன திட்டங்கள் எதையும் பிரதமர் மோடி எதையும் நடைமுறைப் படுத்த வில்லை.

கலைஞர் 5 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்து விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினர்க்கும் சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார்.

உழவர் சந்தை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் வாரியம், சிமெண்ட் சாலைகள், மினி பஸ் வசதி என எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் திமுக ஆட்சியில் செயல்படுத்தினோம்.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக தமிழகக் கிராமங்கள் முழுவதும் சுற்றி வந்தவன் நான். என்னை கிராமத்தினர் அனைவர்க்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் என் முகம் தெரியும்.

முதல் அமைச்சர் எடப்பாடியர் முகம் தெரியுமா?

கஜா புயல் பாதித்த இடங்களை பிரதமர் வந்து பார்த்தாரா?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டார்களே? பிரதமர் ஆறுதல் கூறினாரா?

கஜா புயல் பாதித்தப் பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்க்கிறார் எடப்பாடி .

ஒரு காலத்தில் கீழே நின்று, ஹெலிகாப்டர் பறப்பதைப் பார்த்துக் குதித்தவர் அவர்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களை அகற்றி, எங்களை ஆட்சியில் அமர வைப்பீர்கள் என நம்பிக்கையோடு உங்களை நேரில் சந்திக்கிறோம்.

இந்தக் கிராம சபைக் கூட்டங்களில் நீங்கள் கூறும் குறைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் சரி செய்வோம். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்

என மு.க. ஸ்டாலின் பேசி,

தொடர்ந்து கிராமத்தினர் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் பேச்சைத் தொடர்ந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

இந்தக் கூட்டம் எதற்காக நடத்தினோம்? என புரிந்து கொண்டு, அனைவரும் ஊர் பிரச்சினைகளைக் குறித்துப் பேசி இருக்கிறீர்கள்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத் தலைவர்கள் சிலர் நேற்று என்னை சந்தித்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 அருந்ததியர்க்கு கூட உள் ஒதுக்கீடு கொடுத்தது திமுக ஆட்சி  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று, மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால், கல்விக் கடன் தள்ளுபடிக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நேர்மையான அரசியல் வேண்டும் என்றீர்கள். ரேஷன் கடைப் பிரச்சினைப் பற்றிச் சொன்னீர்கள். இதை எல்லாம் சரி செய்ய எம் எல் ஏ , எம்பி மட்டும் தேர்ந்து எடுத்தால் போதாது.

உள்ளாட்சிப் பிரதி திதிகள் வேண்டும். அவர்கள் இருந்தால் உங்கள் பிரச்சினைகள் 50 சதவீதம் உடனே போக்கப்பட்டு விடும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.

தி மு க ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்தோம். 

சுழல் நிதிகள் கொடுத்தோம். 

இன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் அநாதையாக இருக்கின்றனர். அவை மாற வேண்டும். அதற்காகத்தான் உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன்.

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ஆறாயிரம் என 3 தவணைகளில் தரப் போகிறோம் என பிரதமர் மோடி அறிவித்திருப்பது திருட்டுத்தனம். உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்திற்கும் ஜி.எஸ்.டி. வரி போட்டு பணத்தை வசூலித்து, விவசாயிகள் பணத்தையே உதவித் தொகையாக தந்து திருட்டுத் தனம் பண்ணுகிறார் மோடி.

அதுவும் இது ஒரு Trailor ஆம். நான்கரை வருடங்கள் ஆட்சிக்குப் பிறகு பிரதமர் மோடி Trailor விடுகிறார்.

அதை விட மோசமானவர் தமிழக முதல்வர் எடப்பாடி .

ஜெயலலிதாவின் மரணம் என்ற விபத்தின் மூலம் முதல்வரானவர் எடப்பாடி .

எம்.ஜி.ஆர் உடல் நிலை சரியில்லாத போது அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஹெக்டேயும், அண்ணா உடல் நிலை சரியில்லாத போது அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சாதிக் பாட்சாவும் அவர்களது உடல் நிலைக் குறித்து தினமும் அறிக்கை கொடுத்தார்கள்.

கலைஞர் உடல் நிலை சரியில்லாத போது தினமும் காலையும் மாலையும் உடல் நிலைக் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தோம்.

ஆனால் ஜெயலலிதாவின் சிகிச்சை மர்மமாகவே இருந்தது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டு பிடித்து சிறையில் அடைப்போம்.

கலைஞர் இறந்த பிறகு அவரது சமாதியில் காலையும் மாலையும் ஆயிரக்கணக்கானவர் புகழஞ்சலி செலுத்துகிறார்கள். 

ஆனால் ஜெயலலிதாவிற்கு அதிமுக அமைச்சர்கள் இது வரை புகழஞ்சலி நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்களா?

கொடநாடு எஸ்டேட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்க, அங்கே இருக்கும் பென் டிரைவைக் கைப்பற்ற

ஐந்து கொலைகளை செய்திருக்கிறார்கள். அதை செய்யச் சொன்னவர் முதல்வர் எடப்பாடி என பகிரங்கமாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆக ஊழல் செய்து சிறைக்குப் போனவர் ஜெயலலிதா.

கொலைக்காக சிறைக்குச் செல்லும் முதல்வராக எடப்பாடி பழனிச் சாமி இருப்பார்.

தி மு க ஆட்சிக்கு வந்ததும், கீழடியின் அகழ்வாராய்ச்சி அறிக்கைப் பெற்ற பிறகு,

தமிழகத்திற்கும், உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து, உங்கள் பகுதிக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை வழங்குங்கள்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். உங்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப் பட்டு, உங்கள் கிராமப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்

என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து மானாமதுரையில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.

செல்லும் வழியில், கீழடியில் அகழ்வாராய்ச்சிற்காகத் தோண்டப்பட்ட பகுதிகளையும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

Visual sent in mojo kit live
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.