ETV Bharat / state

மானாமதுரையில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் - மானாமதுரை சிப்காட் காவல்நிலைய காவல்துறையினர் வாகன சோதனை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வாகன சோதனையின் போது ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான போலி மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மானாமதுரையில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் - போலீசார் விசாரணை

author img

By

Published : Jun 13, 2022, 1:26 PM IST

சிவகங்கை: மானாமதுரை சிப்காட் காவல்துறையினர் நேற்று (ஜூன்.12) இரவு 1 மணி அளவில் காவல்நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திருச்சுழியிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்ற குழந்தைகள் நலத்திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்படக்கூடிய வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன் மற்றும் ஜெயவீரபாண்டியன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தப்பியோடிய மகேஷ் என்பவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஒன்றை லட்ச ரூபாய் மதிப்பிலான போலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.