ETV Bharat / state

பா.சிதம்பரம் ஒரு பனிப்பாறை - கவிப்பேரரசு வைரமுத்து - Vairamuthu speech today

‘தூரத்தில் இருந்து பார்த்தால் அவர் பாறை; அருகில் சென்று பார்த்தால் அவர் பனிப்பாறை’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 25, 2022, 9:17 AM IST

சிவகங்கை மாவட்ட பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்தின் உதவியாளரும், கவிஞருமான இலக்கியா நடராஜன் எழுத்தில் உருவான ‘பெயர் தெரியாத பறவையென்றாலும்’ என்னும் கவிதை நூலும் ‘மயானக்கரை ஜனனங்கள்’ என்கிற சிறுகதை தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.

அந்த விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், கவிப்பேரரசு வைரமுத்து, மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நூலினை முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

நூல் வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

அதன்பின் கவிப்பேரரசு வைரமுத்து உரையாற்றுகையில், “நான் பெருமைக்காக சொல்லவில்லை. பா.சிதம்பரம் உலக தலைவர். அவரை தூரத்தில் இருந்து பார்ப்பது வேறு; பழகி பார்ப்பது என்பது வேறு. அவரை தூரத்தில் இருந்து பார்த்தால் அவர் ஒரு பாறை. ஆனால் பழகி பார்த்தால் தன்னகத்தில் உள்ள அறிவுகளை 75 சதவீதம் உள்ளே மறைத்து 25 சதவீதம் மட்டுமே வெளியே காட்டி மிதக்கும் பனிப்பாறை.

அவர் உண்மையையும் நேர்மையையும் நேசிக்கிறார். ஒருபோதும் பொய் வாக்குறுதியளிப்பதில்லை. எனவேதான் அவரிடம் பழகுவது என்பது சராசரி அரசியல்வாதியை விட முரண்பட்டதாக தோன்றும். ஆனால், அவர் அருகில் சென்றால்தான் எவ்வளவு ஞானகுழந்தை என்பது தெரியும். எனவே அவரிடம் பழகுங்கள். அவரிடம் உள்ள அறிவை பெருங்கள்” என்றார்.

இதையும் படிங்க: பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை ட்விட்டரில் விமர்சித்த பா.சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.