ETV Bharat / state

'நாடு வளர்ச்சியடைய மோடிக்கு வாக்களிங்க' -எடப்பாடி வேண்டுகோள் - பாஜக

சிவகங்கை: மக்களவைத் தேர்தலையொட்டி சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு வளர்ச்சியடைய, மோடி தலைமையிலான ஆட்சி அமைய அனைவரும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Apr 3, 2019, 11:46 AM IST

Updated : Apr 3, 2019, 3:54 PM IST

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை அரண்மனை வாசல்முன் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாட்டின் நிதி அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம் இந்த தொகுதிக்காக எந்த திட்டமும் செய்யாதபோது அவரது மகன் எப்படி இந்த தொகுதிக்கு நல்ல திட்டங்களை செய்வார்.

எடப்பாடி பழனிசாமி பரப்புரை

ஹெச்.ராஜா திறமையானவர். அவரை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை அவர் கொண்டு வருவார். மற்ற தொகுதிக்கும் எடுத்துக்காட்டாக அவர் செயல்படுவார்.

அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

திமுக கூட்டணி சுயநலனுக்கான கூட்டணி. அதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது. திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. ஆனால் அதிமுக, ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றி விருது பெற்றுள்ளோம்.

தமிழ்நாட்டில் , 304 தொழிற்சாலைகள் தொடங்க அதிமுக அரசு அனுமதி கொடுத்துள்ளது. நாடு வளர்ச்சியடைய, மோடி தலைமையிலான ஆட்சி அமைய அனைவரும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். மேலும்,சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜாவிற்கு வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிவகங்கை   ஆனந்த்
ஏப்ரல்.03

திமுக கூட்டணி ஒரு சுயநல கூட்டணி - எடப்பாடி பழனிசாமி பேச்சு! 

சிவகங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி ஒரு சுயநலக் கூட்டணி என்று விமர்சித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற தேர்லில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை அரண்மனை வாசல்முன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர் கூறியதாவது

ஹெச்.ராஜாவை லட்சக்கணக்கான  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

மேலும் காங்கிரஸ் ப.சிதம்பரம் பல முறை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினராகவும் , நாட்டின் நிதி அமைச்சராக இருந்த போது நாட்டிற்கும் , இந்த தொகுதிக்கும் எந்த திட்டமும் செய்யவில்லை. அவரே செய்யாத போது அவரது மகன் எப்படி இந்த தொகுதிக்கு நல்லதிட்டங்களை செய்வார் என்றார்.

ஹெச்.ராஜா திறமையானவர் , இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவார் , மற்ற தொகுதிக்கு எடுத்து காட்டாக ஹெச்.ராஜா செயல்படுவார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளார். வளர்ச்சிகள் முக்கியதுவம் கொடுப்பதாக அமித்ஷா தூத்துக்குடியில் பேசியுள்ளார். ஆனால் இங்கு ப.சிதம்பரம் எந்த உதவியும் செய்யவில்லை.

100 யூனிட் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி உள்ளது.

திமுக கூட்டணி சுயநலனுக்கான கூட்டணி.அதனால் எந்த பயனும் கிடையாது என்றார். சிவகங்கை பகுதியில் அனைத்து சாலைகளும் சிறப்பாக போடப்பட்டுள்ளது , பொங்கல் பரிசு அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது , அதிமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக விருது பெற்றுள்ளோம். சட்டஒழுங்கு சிறப்பாக உள்ளது. 304 தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்க என்னுடைய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நாடு வளர்ச்சியடைய மோடி தலைமையிலான ஆட்சி அமைய அனைவரும் சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Last Updated : Apr 3, 2019, 3:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.