ETV Bharat / state

கீழடி அகழாய்வில் அமர்ந்த நிலையில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடு கண்டெடுப்பு! - konthagai excavation

சிவகங்கை: கொந்தகையில் நடைபெற்றுவரும் கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அமர்ந்த நிலையிலான எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கொந்தகை அகழாய்வு  2000 ஆண்டுகள் முற்பட்ட எலும்புக்கூடு கண்டெடுப்பு  konthagai excavation  2000 years old Skeleton found in konthagai excavation
கொந்தகை அகழாய்வில் அமர்ந்த நிலையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடு கண்டெடுப்பு
author img

By

Published : Mar 21, 2020, 3:02 PM IST

Updated : Mar 22, 2020, 8:42 AM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த ஆய்வின் முக்கியத் திருப்பமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அமர்ந்த நிலையிலான எலும்புக்கூடு ஒன்று புதைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற மானுடவியல் பேராசிரியர் பிச்சப்பன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறை உதவி இயக்குநர் சிவானந்தம், உதவி தொல்லியல் ஆர்வலர்கள் ஆசைத்தம்பி பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இன்று காலைமுதல் இந்த ஆய்வினை மேற்கொண்டுவருகின்றனர்.

கொந்தகை அகழாய்வு

இது குறித்து துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடி ஆறாம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கொந்தகை ஈமக்காடு அகழாய்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பங்கேற்றுள்ளனர்.

இங்கு கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இந்த ஈமக்காட்டில் முதல்நிலைத் தரவுகளும் இரண்டாம்நிலைத் தரவுகளும் கிடைத்துவருகின்றன. முதல்நிலைத் தரவுகளில் குறிப்பாக இன்று அமர்ந்த நிலையில் உள்ள எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி

அதன் இரண்டு கைகள் தற்போது வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. அதன் முழுமையான வடிவம் கிடைத்த பிறகு அது குறித்த காலக் கணக்குகளை உரிய ஆய்விற்குப் பிறகு வெளியிட இருக்கிறோம். இங்கு உள்ள ஆய்வாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தற்போது அதனை முழுவதுமாக வெளியே எடுக்கும் வண்ணம் ஆய்வுசெய்துவருகின்றனர்.

இங்கு எடுக்கப்படும் எலும்புகள் அனைத்தும் டி.என்.ஏ. மூலக்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகளை தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஒப்புதலோடு விரைவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிடும்.

ஹரியானா மாநிலம் ராக்கிகரியில் கிடைத்த எலும்புக்கூட்டை ஒத்த, படிமங்கள் இங்கே கிடைக்குமா என்பதை இப்போது உறுதிசெய்ய முடியாது. ஆனால் அதற்கான ஆய்வுகள் மிக விரிவாக நடைபெற்றுவருகின்றன" என்றார்.

இதையும் படிங்க: கரோனா பீதி: கீழடியில் பார்வையாளர்களுக்குத் தடை!

Last Updated : Mar 22, 2020, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.