சேலம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் காக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (31). இவரது கணவர் நாகராஜர். இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து ஜெயலட்சுமி வசித்து வந்தார். இதனிடையே ஜெயலட்சுமி எருமாபாளையத்தைச் சேர்ந்த தமிழழகனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த இருவரும் அம்மாபேட்டை பூவாத்தாள் தெருவில் வசித்து வந்தனர்.
இதனிடையே, ஜெயலட்சுமியின் மூத்த மகள் மாதத் தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தது காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் நேற்று (அக்.11) தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி குக்கர் மூடியால் கணவரைத் தாக்கி உள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயலட்சுமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மயிலாடுதுறை உருவாக்கம் - சட்டமுன்வடிவு நிறைவேற்றம்!