சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் கண்காணிப்புப் பணியில், சேலம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (என்.ஐ.பி.) துணைக் கண்காணிப்பாளர் மனோகரன், ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட காவலர்கள் நேற்றிரவு (ஆகஸ்ட் 13), சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று வந்தது. அந்த லாரியைத் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். அந்த லாரியில் பார்சல் மூட்டைகளுக்கிடையே நான்கு மூட்டை கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. இதன் எடை 100 கிலோ ஆகும்.
இதைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். இதன் மதிப்பு 20 லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து, கஞ்சா மூட்டைகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
பின்னர், கஞ்சா கடத்திவந்த ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த சதீஷ்குமார் (40), அரியலூரைச் சேர்ந்த சிவக்குமார் (34) ஆகியோரைக் கைதுசெய்தனர். விசாரணையில், இவர்கள் ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பகுதியிலிருந்து, பவானிக்கு கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: 29 years of சூரியன் - 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'