ETV Bharat / state

பொங்கல் கொண்டாட்டம் உற்சாகம் - Salem Pongal Celebration

சேலத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்
பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்
author img

By

Published : Jan 15, 2020, 3:47 PM IST

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது. சேலம் பகுதியில் வீடுகளிலும், பொது இடங்களிலும் மண் பானையில் பொங்கலிட்டு மக்கள் கொண்டாடினர்.

சேலம் இரும்பு உருக்காலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இரும்பு ஆலை வாயிலில் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர். சமத்துவ பொங்கல் விழாவில் தொழிற்சாலையில் பணிபுரியும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பொங்கலிட்டு, தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்தகளை பரிமாறிக்கொண்டனர்.

இதே போன்று கணபதி நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கலில் பெண்கள், ஆண்கள் அனைவரும் உரி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்து பொங்கலை கொண்டாடினர்.

பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்

எம்டிஎஸ் நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் பின் எஸ்.ஆர் பார்த்திபன் உரியடி நிகழ்வில் கலந்து கொண்டு பானையை உடைத்தனர்.

இதையும் படிங்க: வெளிநாட்டினருடன் 'பொங்கலோ பொங்கல்' - கலக்கிய குமரி மக்கள்

Intro:சேலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகை மக்கள் கொண்டாடிவருகின்றனர். பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய முறையில் உரி அடித்தல் கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளில் மக்கள் பங்கேற்று பொங்கலை கொண்டாடினர்.
Body:
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழர்கள் வாழும் பகுதிகளில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் பகுதியில் மக்கள் வீடுகளிலும், பொது இடங்களில் மண்பானையில் பொங்கலிட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடினர். சேலம் இரும்பு உருக்காலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் இரும்பாலை வாயிலில் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர். சமத்துவ பொங்கல் விழாவில் தொழிற்சாலையில் பணிபுரியும் பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்களும் பொங்கலிட்டு, தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதே போன்று கணபதி நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கலில் பெண்கள் ஆண்கள் அனைவரும் பாரம்பரியமான தமிழர் விளையாட்டுக்களான உரி அடித்தல், கயிறு இழுத்தல் , கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்து பொங்கலை கொண்டாடினர். எம் டி எஸ் நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் பின் பாராளுமன்ற உறுப்பினர் உரியடி நிகழ்வில் கலந்து கொண்டு பானையை உடைத்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.