ETV Bharat / state

மேட்டூர் அணை திறப்பு 60ஆவது ஆண்டாக தள்ளிப்போனது - விவசாயிகள் வேதனை - 60ஆவது ஆண்டாக தள்ளிப்போனது

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது தொடர்ந்து 60ஆவது ஆண்டாக இந்தாண்டும் தள்ளிப்போனதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை
author img

By

Published : Jun 12, 2019, 10:37 PM IST

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை, தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 120 அடி உயரத்துக்கு நீர் தேக்கப்படும் போது 93.47 டிஎம்சி நீர் இருப்பு இருக்கும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரை பயன்படுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 16.40 லட்சம் ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இந்த நீர் குடிநீராகவும் இருந்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு ஏற்றவகையில், ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை மொத்தம் 330 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் பருவமழை பொய்த்துப் போவது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டான 1934 முதல் இதுவரை 16 முறை மட்டுமே உரிய காலத்தில் பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி
குறுவை சாகுபடி

அதேபோல், கடந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஜூலை மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பினனர் ஜூலை 17ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து அதேமாதம் 19ஆம் (ஜூலை 19ஆம்) தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் பெய்ய வேண்டிய கோடை மழை, பருவமழை தள்ளிப்போனதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை.

இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இன்றைய தினம் வரை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 45.53 அடியாகவும் , நீர் இருப்பு 15.11 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் போதிய நீர் இருப்பும், வரத்தும் இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து இன்று (12ஆம்தேதி) குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வறட்சியில் விவசாய நிலங்கள்
வறட்சியில் விவசாய நிலங்கள்

நடப்பு நீர்பாசன ஆண்டில் தொடர்ந்து 8ஆவது ஆண்டாகவும், அணையின் வரலாற்றில் 60ஆவது ஆண்டாகவும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போயுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை என மொத்தம் 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொறுத்து இந்த அளவில் தண்ணீர் தேவை என்பது மாறுபடும். கடைசியாக 2011ஆம் ஆண்டு 90 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் ஜூன் 6ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கும் நிலை ஏற்படவில்லை.

கடந்தாண்டும், நடப்பாண்டும் பருவ மழை பொய்த்தது. காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகமும் மறுத்ததால் போதிய தண்ணீர் கிடைக்காமல் குறுவை மட்டுமின்றி சம்பா, தாளடியும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது என்றனர். இந்த நிலையில் ஜூலை இறுதியில் திறக்க வாய்ப்புள்ளது, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 40 அடியாக சரிந்திருந்தது. ஜூன் இறுதியில் பருவமழை கை கொடுத்ததால் கர்நாடக அணைகள் நிரம்பி ஜூலை தொடக்கத்தில் மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகளின் உபரிநீர் வந்து சேர்ந்தது.

விவிசாயிகள் வேதனை
விவிசாயிகள் வேதனை

இதனால் ஜூலை 17ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. ஜூலை 19ஆம் தேதி அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூலை 27ஆம் தேதி அணை நிரம்பியது. நடப்பு ஆண்டிலும் பருவ மழை கைகொடுக்காததால் ஜூலை இறுதிக்குள் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் .

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.