ETV Bharat / state

234 தொகுதிகளிலும் சிறப்பு குறைதீர் கூட்டம்: முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்து பேச்சு - Grievance meeting in salem

சேலம்: மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக சிறப்பு குறைதீர்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

CM
author img

By

Published : Aug 19, 2019, 2:47 PM IST

Updated : Aug 19, 2019, 7:22 PM IST

தமிழ்நாட்டில் முதன்முறையாக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் இன்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முன்னுரிமை அளித்து வருகிறோம். மக்களின் குறைகளை தீர்க்க பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டுவந்தாலும் அதற்கு வலுசேர்க்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளிலும் சிறப்பு குறைதீர் கூட்டம் செயல்படுத்தப்படும். இதற்கென ஒரு வட்டத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம், 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைதீர் மனுக்கள் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். நகர்புற வார்டுகள், கிராமங்கள்தோறும் வீடுகளுக்கு நேரடியாக சென்று மனுக்கள் பெறப்படும். மக்களை அலுவலர்கள் நேரடியாகச் சென்று மனுக்கள் பெறும்வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அனைத்துத் துறையினர் அடங்கிய குழு, மக்களை சந்திப்பார்கள்.

இந்தக் கோரிக்கை முகாமில் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டப்படும். தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இந்த குறைதீர் கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர கோரிக்கையாக அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை செயல்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கை மனு, தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். எடப்பாடி தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜலகண்டாபுரம் பகுதியில் புதிய புறவழிச் சாலை அமைக்கப்படும்.

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முன்னுரிமை அளித்து வருகிறோம். அவற்றை தீர்க்க பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தாலும், அதற்கு வலு சேர்க்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு குறைதீர் கூட்டம்

விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், உழவராக பிறந்து முதலமைச்சராக மாறியவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி என்ற பெயரை உலகமெங்கும் முத்திரை பதித்து வருகிறார். ரிக்ஷாக்காரர்களுக்கு எம்ஜிஆர் உதவினார். பெண் குழந்தைகளுக்கு ஜெயலலிதா உதவினார். அந்த வழியில் ஏழை எளிய மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி உதவுகின்றார்.

நீர்நிலைகள், புறம்போக்கு இடங்களில் வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கி ஏழைகளின் இன்னல்களுக்கு தீர்வு ஏற்படுத்தி வருகிறார். ஜெயலலிதா இடத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவரைப்போல் செயல்படுவாரா என்று விமர்சனம் செய்தவர்கள் தற்போது வியந்து அவரை பாராட்டுகின்றனர்.

பல்வேறு இடங்களில் முதலமைச்சர் செல்லும்போது மக்கள் கோரிக்கை கொடுப்பதற்கு முன்பே அதனை அறிந்து நிறைவேற்றி வருபவர் எடப்பாடி பழனிசாமி. அண்ணா கண்ட கனவுகளை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிவருகிறார் என்று பேசினார்.

Intro:Body:

salem CM Speech

Conclusion:
Last Updated : Aug 19, 2019, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.