பாஜகவின் மூத்தத் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் சில வாரங்களுக்கு முன்பு சேலத்திலுள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தினரை இன்று (15-06-2020) நேரில் சந்தித்து மாநில பாஜக தலைவர் எல்.முருகன் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க அரசு எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன. சிறு, குறு தொழில்களைத் தொடங்குவதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் தமிழ்நாட்டில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் திட்டடங்கள் வழியாக இந்திய அளவில், தமிழ்நாடு தான் அதிக பலன்களை அனுபவித்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கரோனா தொற்றுப் பரவலை வைத்து அரசியல் செய்கின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் செயல்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சென்னையில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு - எவையெவை இயங்கும்?