சேலம்: 75ஆவது சுதந்திர தினவிழா நிறைவு மற்றும் அமுத பெருவிழாவை ஒட்டியும், உலக ஒற்றுமையை வலியுறுத்தியும் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்ட பரதநாட்டியம் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சேலம் மறை மாவட்ட ஆயர் அருட்செல்வன் ராயப்பன் தலைமை தாங்கினார்.
இதில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்து 550 மாணவிகள் மூவண்ண சீருடை அணிந்து ஒரே நேரத்தில் பாரதியார் பாடலுக்கு தொடர்ந்து 6 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி அசத்தினர். இந்த நிகழ்வை பீனிக்ஸ் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. மேலும், பரதநாட்டிய நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: பாட்டு பாடி உற்சாகத்துடன் நடவுப் பணியில் ஈடுபட்ட பெண்கள்