ETV Bharat / state

சேலம் உருக்காலைப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்! - salem district news

சேலம் மாநகராட்சி சித்தனூர் தொடங்கி உருக்காலை பகுதியிலுள்ள கணபதிபாளையம், மோகன் நகர், உருக்காலை 3ஆவது கேட்வரை உள்ள பகுதிகள் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் சூழல் ஏற்பட்டுள்ளது.

salem steel plant garbage issue
சேலம் உருக்காலைப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்
author img

By

Published : Oct 16, 2020, 5:15 PM IST

சேலம்: சேலம் தாரமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பகுதிகளான சித்தனூர் சேலம் உருக்காலை, அழகுசமுத்திரம் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறன.

இதனால், அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஜனவரி முதல் சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தும் கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்த மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டதாக தெரிவித்தது.

ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்ததுபோல் தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் தடைவிதித்த 50 மைக்கரான் அளவிலான பிளாஸ்டிக் பைகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்திவரும் சூழலில் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன.

சேலம் உருக்காலைப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

சேலம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் பெரும்பாலான குப்பைகள் புதிய பேருந்து நிலையில் அருகேயுள்ள குப்பை சேகரிக்கும் பகுதியில் கொட்டப்படுகிறது.

ஆனால், தற்சமயம் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை. அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை அவ்வப்போது, சிலர் எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதோடு அப்பகுதியிலுள்ளவர்களுக்கு சுவாச கேளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட ஏதுவாக அமைகிறது.

salem steel plant garbage issue
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்

அரசிடம் இதுகுறித்து முறையிட்டாலும் முறையான நடவடிக்கை இல்லை என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இது குறித்துப் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியம், "கடந்த ஆறு மாதங்களாக குப்பைகள் அதிகளவில் இந்த இடத்தில் கொட்டப்படுகின்றன.

பெரும்பாலான குப்பைகள் பிளாஸ்டிக் குப்பைகளே. இதுதொடர்பாக பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டோம்.

ஆனால், எவ்வித பயனும் இல்லை. நாங்கள் வளர்க்கும் மாடுகள் இந்த குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பைகளை சாப்பிட்டு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றது.

இங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று எதுவும் ஏற்படும் முன்னே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இதையும் படிங்க: இறந்ததாக கூறி உயிரோடிருந்த முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.