ETV Bharat / state

சிலை அவமதிப்பு சம்பவங்களுக்கு அரசு துணை போகிறது - கி.வீரமணி - சிலை அவமதிப்புக்கு அரசு துணை

சேலம்: தமிழ்நாட்டில் பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பு செய்பவர்களுக்கு மாநில அரசு துணை போகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கி. வீரமணி
author img

By

Published : Aug 26, 2019, 3:28 PM IST

திராவிடர் கழகத்தின் பவள விழா சேலத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சேலம் வந்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. பெரியாரும் அம்பேத்கரும் தமிழ்நாட்டில் வெறும் சிலைகளாக மட்டும் வைக்கப்படவில்லை. இருவரும் ஆழமான அசைக்க முடியாத கொள்கைகள், வலுவான தத்துவங்கள் மூலம் பதிந்துள்ளனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் அவமதிக்கும் வகையில் இது போன்ற கீழ்தரமான செயல்களை செய்கிறார்கள்.

சிலை அவமதிப்பு செய்பவர்களுக்கு இந்த சம்பவங்கள் மேலும் ஆதரவான குரல்கள் வலுசேர்க்கும் வகையில் வெடித்துக் கிளம்பும் என்பதை அறியாதவர்கள். இவர்கள் நெருப்போடு விளையாடக் கூடாது என்று எச்சரிக்கிறோம். இது போன்ற சம்பவங்களை செய்யும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை அடக்காமல், தமிழ்நாடு அரசும் தெரிந்தோ தெரியாமலோ துணை போவதுதான் அவமதிப்பு சம்பவங்கள் நடைபெற காரணம்" என்று தெரிவித்தார்.

Intro:தமிழகத்தில் பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பு செய்பவர்களுக்கு தமிழக அரசு துணை போகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சேலத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

Body:திராவிடர் கழகத்தின் பவள விழா சேலத்தில் நாளை நடைபெற உள்ளது இதில் பங்கேற்க சேலம் வந்துள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்," தமிழகத்தில் பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

பெரியாரும் அம்பேத்கரும் தமிழகத்தில் வெறும் சிலைகளாக மட்டும் வைக்கப்படவில்லை. இருவரும் ஆழமான அசைக்க முடியாத கொள்கைகள், வலுவான தத்துவங்கள் .

அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் அவமதிக்கும் வகையில் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்கிறார்கள்.

சிலை அவமதிப்பு செய்பவர்கள் பெரியார், அம்பேத்கரின் கொள்கைகளுக்கு தமிழகத்தில் மேலும் ஆதரவான குரல்கள் வலு சேர்க்கும் வகையில் வெடித்துக் கிளம்பும் என்பதை அறியாதவர்கள்.

பெரியார் அம்பேத்கர் சிலை அவமதிப்பு அவர்களை நெருப்போடு விளையாட கூடாது என்று எச்சரிக்கிறோம்.

அவமதிப்பு செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம். சிலை அவமதிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்த சம்பவங்களை இங்கே நடந்து கொண்டிருக்கும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இது போன்ற சம்பவங்களை செய்யும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை அடக்காமல், தமிழக அரசும் தெரிந்தோ தெரியாமலோ துணை போவதுதான் அவமதிப்பு சம்பவங்கள் நடைபெறக் காரணம்" என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த பேட்டியின் போது விடுதலை சிறுத்தை கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் திராவிடர் கழக கலி.பூங்குன்றன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.