சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது 55 மீனவர்களை விடுவித்து, 8 விசைப் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளதாக, தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி