சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு , சேலம் தெற்கு , சேலம் மேற்கு , வீரபாண்டி , ஓமலூர் , எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் இந்நிலையில், அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய நிலையில் காவல்துறையினர் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேசைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
சேலம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு , சேலம் தெற்கு , சேலம் மேற்கு , வீரபாண்டி , ஓமலூர் , எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கருப்பூர் ஊரிலுள்ள உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன .
அங்கு 24 மணி நேரமும் போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில், சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரோகிணி , வாக்கு எண்ணிக்கையின் நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது .
இதனை தொடர்ந்து வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சேலம் கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரியில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் , வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது . இந்த வாக்கு எண்ணிக்கையில் 14 மேஜைகள் போடப்பட்டு ஒரு சுற்றுக்கு 14 வாக்கு இயந்திரங்கள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவும் உதவி தேர்தல் அதிகாரி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்த பின்பே முடிவு அறிவிக்கப்படும் .
வாக்கு எண்ணிக்கையின்போது வாக்காளர்களின் முகவர்கள் செல்போன் பேனா போன்ற பொருட்கள் எதுவும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படமாட்டாது . வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது .
தொகுதிக்கான சுற்று முடிவு வெளியானதும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவிபேட் எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் . அனைத்து சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் முடிந்த பின்பே இறுதி முடிவு அறிவிக்கப்படும் .
வாக்கு எண்ணிக்கைக்காக கருப்பூர் பொறியியல் கல்லூரி யில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பும் தேர்தல் நடத்தை விதி முறைகளும் நடைமுறை படுத்தப்பட்டு , வாக்கு எண்ணும் மையத்தில் அதிக அளவிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் , சுழற்சிமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.