ETV Bharat / state

சேலத்தில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

author img

By

Published : Aug 6, 2019, 10:51 PM IST

சேலம் : ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு குறித்து கோலப் போட்டியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

சேலத்தில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீர் மேலாண்மை குறித்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் கருத்தரங்கு, பேரணி, செயல் விளக்க நிகழ்வுகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி , பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று சேலம் அடுத்த ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நீர் சேமிப்பு என்ற தலைப்பில் மாணவியர்களுக்கு கோலப்போட்டியும், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மாணவிகள் மத்தியில் நீர் மேலாண்மை குறித்து பேசுகையில், " வேலூர் மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டத்தை, வெற்றிகரமாக 20 ஆயிரம் பெண்கள் செயல்படுத்திக் காட்டினார்கள். அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இது தொடர்பாக சென்ற மாதம் பிரதமர் மோடி தனது மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார். அதேபோல சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. " என்று கூறினார்.

Intro: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் நீர் மேலாண்மை மற்றும் நீர் சேமிப்பு குறித்து கோலப் போட்டி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Body:நீர் மேலாண்மை குறித்து மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகக அளவில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

நீர் சேமிப்பு குறித்த கருத்தரங்கு, பேரணி மற்றும் செயல்விளக்க நிகழ்வுகள் , கல்லூரி , பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்டு வருவது பொதுமக்களையும் நீர் மேலாண்மை இயக்கத்தில் முக்கிய அங்கத்தவர்களாக மாற்றி வருகிறது.

அந்த வகையில் இன்று சேலம் அடுத்த ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியையொட்டி நீர் சேமிப்பு தலைப்பில் நூற்றுக்கணக்கான மாணவியர் பங்கேற்ற கோலப் போட்டி நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் நீர் மேலாண்மை பற்றி விளக்க உரை நிகழ்த்தினார்.

ஆட்சியர் ராமன் பேசுகையில் ," நீர் மேலாண்மை திட்டம் வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக 20 ஆயிரம் பெண்கள் செயல்படுத்தி காட்டினார்கள். அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

காய்ந்துபோன உறை கிணறுகள் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அது தொடர்பாக சென்ற மாதம் பிரதமர் மோடி தனது மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.

மகளிர் சக்தியால்தான் வேலூர் மாவட்டத்தின் நீர்மட்டம் உயர்ந்தது என்று பாராட்டினார். அதேபோல சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது .

இதனை மாணவிகள் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் , உறவினர்கள் மத்தியில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Conclusion:இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கோலங்களை வரைந்து அசத்தினர். அதன் பின்னர் மாணவிகள் கலந்துகொண்ட நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.