ETV Bharat / state

சவுதியில் சேலம் இளைஞர் உயிரிழப்பு - உடலை பெற்றுத் தர மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு! - Saudi arabia

சவுதியில் உயிரிழந்ததாக கூறப்படும் சேலம் இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Salem Youth Died in saudi arabia
Salem Youth Died in saudi arabia
author img

By

Published : May 6, 2023, 5:36 PM IST

Salem Youth Died in Saudi arabia went to gone job

சேலம் : சவுதி அரேபியால் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழகம் பொறியிலாளரின் உடலை பெற்றுத் தருமாறு கோரி அவரது உறவினர்கள் சேலம் மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரின் மகன் சீதாராமன். பொறியியல் பட்டதாரியான சீதாராமன், கடந்த சில மாதங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் உள்ள பிரபல பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரில் செயல்பட்டு வரும் அந்நாட்டு பெட்ரோலியம் நிறுவனத்தில் சீதாராமனுக்கு வேலை கிடைத்து உள்ளது.

அதற்கான பணி நியமன ஆணையும் அவருக்கு ஆன்லைன் மூலம் கிடைத்து உள்ளது. இதனையடுத்து விமான மூலம் தமிழ்நாட்டில் இருந்து ரியாத் நகருக்கு சென்ற சீதாராமன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்நாட்டு பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியியலாளராக பணியில் சேர்ந்து உள்ளார்.

தொடர்ந்து ரியாத் நகரில் வாடகைக்கு அறை எடுத்து சீதாராமன் தங்கி உள்ளார் .அவருடன், அவர் பணி புரியும் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஐந்து இந்தியர்களும் தங்கி உள்ளனர். இந்த நிலையில், அவர்கள் அனைவரும் தங்கி இருந்த அறையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் ஆறு பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இறப்பு தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் சீதாராமன் உறவினர்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆனால் சவுதி அரேபியாவில் சீதாராமன் உயிரிழந்தது தொடர்பான எந்த விபரமும், அந்த நாட்டு அரசு தரப்பில் இருந்து கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் மனவேதனை அடைந்து உள்ளனர்.

சவுதி அரேபியா சென்ற மூன்று, நான்கு நாட்களுக்குள் சீதாராமன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற தகவலால் அவரது குடும்பம் செய்வதறியாது சோகத்தில் மூழ்கி உள்ளது. அவரது உயிரிழப்பு தொடர்பான விபரங்களை தங்களுக்கு பெற்றுத் தருமாறும், சீதாராமனின் உடலை சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா கொண்டு வந்து தங்களிடம் ஒப்படைக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகத்திடம் அவரது உறவினர்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீதாராமனின் உறவினர்கள், "இன்ஜினியர் வேலையில் சேர்ந்து மூன்று நாட்களுக்குள் சீதாராமன் இறந்தது தாங்க முடியாத துன்பமாக உள்ளது. அவரது இறப்பு குறித்து குடும்பத்தினருக்கு உறுதி செய்ய வேண்டும். அப்படி சீதாராமன் உயிரிழந்தால் அவரது உடலை சவுதியில் இருந்து பெற்று குடுமப் உறுப்பினர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீதாராமன் இறப்பிற்கான காரணத்தையும் முழுமையாக வெளியிட வேண்டும். சீதாராமன் இறப்பு குறித்த மர்மத்தை வெளிக் கொணர அரசு எங்களுக்கு உதவிடவும் வேண்டும்" என்று தெரிவித்து உள்ளனர். சீதாராமன் குறித்த தகவல்களை பெற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : "மக்களை சாதியால், மதத்தால், பிரிப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது" - முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.