ETV Bharat / state

தமிழ்நாட்டில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு! - தமிழ்நாட்டில் சிறந்த காவல் நிலையம்

சேலம்: தமிழ்நாட்டில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

police
police
author img

By

Published : Jan 22, 2021, 2:53 PM IST

ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு சிறந்த காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மாநகர பகுதியில் அமைந்துள்ள 'B1 டவுன் காவல் நிலையம்' இந்த ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தின் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் , பொதுமக்களின் மனு மீதான நடவடிக்கைகள் எடுத்தது, வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தது ஆகிய காவல் நிலைய நடவடிக்கைகளை பட்டியலிட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு

அந்த வகையில் சேலம் டவுன் காவல் நிலையம் 55 ஆயிரத்து 58 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தது. இதனை அடுத்து சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சரியாக உள்ளதா என்பதை சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையிலான குழுவினர் சில நாட்களுக்கு முன்பு சேலம் வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது காவல் நிலையத்தில் உள்ள பைல்கள், வழக்கு விசாரணை குறித்த விவரங்களை சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார், காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல் காவலர்களிடம் விசாரித்து அறிந்தார். இந்த நிலையில் இன்று (ஜனவரி 22) டவுன் காவல் நிலையம் மாநிலத்தில் முதல் காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முடிவு வெளியாகியுள்ளது.

இது குறித்து டவுன் காவல் நிலைய ஆய்வாளர் குமார் கூறுகையில், ”மிகுந்த சந்தோஷமான செய்தி. பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சக காவலர்களின் உதவியாலும் உயர் அலுவலர்களின் வழிகாட்டுதலினாலும் இது சாத்தியமாகியுள்ளது அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.