ETV Bharat / state

நீதிமன்ற வளாக பாதுகாப்பு.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - MADRAS HIGH COURT TODAY ORDER

தமிழகத்தில் உள்ள 179 நீதிமன்ற வளாகங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 6:30 PM IST

சென்னை: கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் காவலர்களுக்கு இடையே கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி சில நீதிபதிகளும் காவல்துறையால் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெறும்போது பல்வேறு காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும், தமிழக காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல், நீதிமன்ற பாதுகாப்பை உறுதிபடுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் நீதிமன்ற பாதுகாப்பை கொண்டுவர உத்தரவிட்டார்.

இதையடுத்து, உயர்நீதிமன்றம் 3 அடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு முழுமையாக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எந்த அசம்பாவித சம்பவங்களும் இதுவரை நடைபெறவில்லை.

இந்நிலையில், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாக இருப்பதால், அவ்வபோது குற்ற சம்பவங்களும், வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜரான வழக்கறிஞர் கண்ணன் என்பவர் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த உரிய பாதுகாப்பை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் ஹரி தாக்கல் செய்த அறிக்கையில், 'தமிழகத்தில் உள்ள 179 நீதிமன்றத்தில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த 7,800 கண்காணிப்பு கேமிரா மற்றும் மானிட்டர்கள் பொருத்த உள்ளதாகவும், இதற்காக தமிழக அரசிடம் 20 கோடியே 04 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கக் கோரி கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், நிதி கிடைத்தவுடன் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது' என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.