ETV Bharat / state

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை! போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்

சேலம்: சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுக்கும் நோக்கில் உருக்காலை தொழிலாளர்கள் ஆலை நுழைவாயிலின் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை ! தடுக்கும் விதமாக காத்திருப்பு போராட்டம் !
author img

By

Published : Aug 5, 2019, 5:08 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலை தனியார்மயமாக்கும் நோக்கத்தோடு மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் செயல் நிர்வாகம் சர்வதேச பத்து பேருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வரை டெண்டர் கோரலாம் என்று அறிவித்திருந்த நிலையில் டெண்டர் கோர யாரும் வராததால் கால நீட்டிப்பை வரும் 20ம் தேதி வரை நீடித்துள்ளது.

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை! தடுக்கும் விதமாக காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் சேலம் உருக்காலையை பார்வையிட தனியார் துறையினர் ஆலைக்கு வருவதாக தகவல் வெளியானதால், அதை தடுக்கும் விதமாக தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் ஆலையின் பிரதான நுழைவாயிலின் முன்பு அமர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Intro:சேலம் இரும்பாலை தனியார் பார்வையிட வருவதை தடுக்கும் நோக்கில், உருக்காலை தொழிலாளர்கள், ஆளை நுழைவாயிலின் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை துவங்கி உள்ளனர். 24 மணி நேரமும் தொழிலாளர்கள் சுழற்சி முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆலையை பார்வையிட வரும் தனியார் யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று தொழிலாளர்கள் எச்சரிக்கை.

Body:தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலை தனியார் மயமாக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு ஆலோசனையின் பேரில் செயில் நிர்வாகம் சர்வதேச பத்து பேருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை டெண்டர்
கோரலாம் என்று அறிவித்து இருந்த நிலையில் டெண்டர் கோர யாரும் வராததால் 10க்கான கால நீட்டிப்பை வரும் 20ம் தேதி வரை நீடித்து உள்ளது. இந்த நிலையில் சேலம் ஒரு காளையை பார்வையிட தனியார் துறையினர் ஆலைக்கு வருவதாக தகவல் வெளியானது தொடர்ந்து சாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கத்தினர் தனியார் நிறுவனத்தினர் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆலையின் நுழைவாயிலில் முன்பு காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் ஆலையின் பிரதான நுழைவாயிலின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த காத்திருக்கும் மற்றும் கண்காணிப்பு போராட்டத்தை நடத்திட திட்டமிட்டுள்ளனர் மேலும் ஆலைக்கு வரும் அடையாளம் தெரியாத வாகனங்களை சோதனை செய்த பின்னரே ஆலைக்குள் அனுமதித்து வருகின்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கும் பொழுது தொழிலாளர்களின் பல்வேறு கட்ட போராட்டத்தை கண்டு கொள்ளாமல் மத்திய பாஜக அரசு அனைத்து தனியார் மயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்குள் தனியார் நிறுவனத்தினர் ஆலை பார்வையிட வருவதாக தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விடவே இந்த போராட்டம் நடைபெற்று வருவதாகவும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் இது தவிர ஒரு காளையை தனியார்மயமாக்கலை கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் தனியார் துறையினர் உள்ளே நுழையாமல் இருக்க எந்த வித போராட்டத்திற்கும் தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.