ETV Bharat / state

சேலத்தின் 172 ஆவது  ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் பதவியேற்பு - எஸ்.ஏ. ராமன்

சேலம்:  சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம்த்தின் 172 ஆவது  ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் பதவியேற்பு
author img

By

Published : Jul 1, 2019, 2:08 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த ரோகிணி, சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோன்று வேலூர் மாவட்ட ஆட்சியராக பனியாற்றி வந்த எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இதையொட்டி சேலம் மாவட்டத்தின் 172 ஆவது மாவட்ட ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர், குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பொதுமக்கள், மாற்று திறனாளிகளிடம் மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Intro:சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திரு எஸ்.ஏ. ராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Body:

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி ரோகினி தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார் இதேபோன்று வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தின் 172 ஆவது மாவட்ட ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உள்ளிட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றிய பின், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம்), ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் துணை செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பின்னர் 2010 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் நியமனம் செய்யப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தில் சென்னை நிலநிர்வாக இணை ஆணையராகவும், பின்னர் 2016 முதல் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றினார். தற்போது சேலம் மாவட்ட ஆட்சியராக திரு எஸ் ஏ ராமன் பொறுப்பேற்றுள்ளார்.Conclusion:இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடம் குறைதீர்க்கும் மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.