ETV Bharat / state

அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தற்கொலை - Salem framer death

சேலம்: பல்லகாணூர் பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பூச்சி மருந்து குடித்த விவசாயி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விவசாயி தற்கொலை
Salem Framer Suicide
author img

By

Published : Dec 18, 2019, 11:39 PM IST

சேலம் பல்லகாணூரில் விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்காக கடந்த 14ஆம் தேதி நிலத்தில் இருந்த மரங்களை மின் துறை அலுவலர்கள் வெட்டியுள்ளனர். அப்போது அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி பெருமாள் ”தனக்கு இழப்பீடு வழங்கிவிட்டு மரத்தை வெட்ட வேண்டும் இல்லை எனில் வெட்டக்கூடாது” என கூறியுள்ளார்.

அப்போது அலுவலர்கள் "மரத்தை வெட்டுவோம் உன்னால் முடிந்ததை பாரு" என கூறியபோது, பெருமாள் ”மரத்தினை வெட்டினால் தற்கொலை செய்து கொள்வேன்” என கூறியுள்ளார். அதற்கு அலுவலர்களோ ”அப்படி என்றால் தற்கொலை செய்துகொள்” என அலட்சியமாக கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து, 14ஆம் தேதி மாலை வெட்டப்பட்ட மரத்திற்கு அடியில் பூச்சி மருந்து குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

பெருமாளின் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று பெருமாளின் உறவினர்கள் சேலம் மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு முன் உடலை வாங்க மறுத்தும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், உயிரிழப்புக்கு காரணமான மின்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனை

மேலும், அவர் கடன் பிரச்னையால்தான் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தங்களிடம் காவல் துறையினர் எழுதி வாங்கி கொண்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்

Intro:சேலம் பல்லகாணூர் பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பூச்சி மருந்து குடித்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Body:

சேலம் பல்லகாணூரில் விவசாய நிலத்தில் உயர்மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்காக கடந்த 14 ஆம் தேதி நிலத்தில் இருந்த மரங்களை மின் துறை அதிகாரிகள் வெட்டியுள்ளனர். அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி பெருமாள் தனக்கு இழப்பீடு வழங்கிவிட்டு மரம் வெட்ட வேண்டும் இல்லை எனில் வெட்ட கூடாதென கூறியுள்ளார்.அப்போது அதிகாரிகள் மரத்தினை வெட்டுவோம் உன்னால் முடிந்ததை பாரு என கூறிய போது மரத்தினை வெட்டினால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.அப்படி என்றால் தற்கொலை செய்து கொள் என அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகின்ற நிலையில் 14 ஆம் தேதி மாலையில் வெட்டப்பட்ட மரத்திற்கு அடியில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். விவசாயின் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்த போது சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் இன்று விவசாயின் உறவினர்கள் சேலம் மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு முன் உடலை வாங்க மறுத்தும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், உயிர் இழப்புக்கு காரணமான மின்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் துறையினர் கடன் பிரச்சனையால் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தங்களிடம் எழுதி வாங்கி கொண்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பேட்டி - சக்தி வேல் (இறந்தவரின் மகன் )

2.ராமமூர்த்தி (விவசாயிகள் சங்கம் சேலம் )

3. அன்னக்கிளி (விவசாயின் மனைவி சேலம் )

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.