சேலம் தீவட்டிபட்டியை அடுத்து அமைந்துள்ள டேனிஷ்பேட்டையில் தொடர் பருவமழை காரணமாக நீர் நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது. இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கு குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வெளிவர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இங்கே மக்கள் குளிப்பதற்காக பெருமளவில் கூடுகின்றனர். குறிப்பாக வார இறுதி நாள்களில் இங்கே பெருமளவு கூட்டம் காணப்படுகிறது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு மக்கள் கூடுவது, மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: