ETV Bharat / state

சேலம் பட்டாசு கிடங்கு வெடி விபத்து: ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!! - சர்க்கார் கொல்லப்பட்டி

சேலம் பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 3, 2023, 3:42 PM IST

சேலம்: இரும்பு ஆலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருபவர், கந்தசாமி. இந்த நிலையில், இவரது பட்டாசு கிடங்கில் கோயில் திருவிழாவிற்காக ஆர்டர் பெற்று நாட்டு வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தன. இதனிடையே, நேற்று முன்தினம் (ஜூன் 1) பட்டாசு கிடங்கில் கோயில் திருவிழாவிற்காக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில், கடைக்குள் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. மேலும், கடை முழுவதுமாக வெடித்து தரைமட்டமாகியது. இதனால், பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு, தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலம் வெடி விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.. ஈபிஎஸ் கோரிக்கை

இந்த நிலையில், இந்த பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அரசு பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெடி விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Gokulraj murder case: சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.