சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு திட்டத்தின் கீழ் நகரங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளின் கல்வி, சுகாதார மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக கடந்த ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் இடையே கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த, எளிதான வாழ்க்கை முறை குறித்த கருத்துக்கணிப்பு எடுப்பது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு வாகனத்தை ஆணையாளர் சதீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த வாகனமானது நகரின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி, பள்ளிகளுக்குச் சென்று அவர்களின் கருத்துகளைப் பதிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட மாநில அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மராத்தான்!