ETV Bharat / state

முதியோரை குறிவைக்கும் கொலையாளிக்கு போலீஸ் வலை...! - பணத்தை பறித்து செல்லும் சைக்கோ

சேலம்: சாலையோரம் உறங்கும் முதியோரை கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் கொலையாளியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Psycho killer targeting the elderly - Police search
Psycho killer targeting the elderly - Police search
author img

By

Published : Feb 5, 2020, 10:22 AM IST

சேலம் காசகாரனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டயர் விற்பனை நிலையம் வாயில் முன்பு இரண்டு வருடங்களாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் டயர் விற்பனை நிலையம் வாயிலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில், அடையாளம் தெரியாத ஒருவர் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன் தினம் (பிப். 03) இரவு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த பணத்தையும் அந்த அடையாளம் தெரியாதவர் எடுத்துச் சென்றார்.

அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களை தொடர்ந்து, கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து சேலம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாலையோரம் உறங்கும் முதியோர்களை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து பணத்தை எடுக்கும் சிசிடிவி காட்சிகளை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மாநகர் முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

முதியவர்களை குறிவைத்துக்கொல்லும் சைகோ கொலையாளி

இதையும் படிங்க: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 30-க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்!

Intro:சேலத்தில் சாலையோரம் உறங்கும் முதியோர்களை குறிவைத்து கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து பணத்தை எடுக்கும் எடுத்துச்செல்லும் சைக்கோ கொலையாளியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Body:
சேலம் காசகாரனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டயர் விற்பனை நிலையம் வாயில் முன்பு கடந்த 2 வருடங்களாக 60 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் டயர் விற்பனை நிலையம் வாயிலில் உறங்கி கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தினை கொலையாளி எடுத்து சென்றுள்ளான்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றிரவு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு முதியவரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தையும் கொலையாளி எடுத்துச் சென்றுள்ளான்.

நேற்று முன்தினம் இரவு ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சைக்கோ கொலையாளி குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து சேலம் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சைக்கோ கொலையாளி சாலையோரம் உறங்கும் முதியோர்களை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து பணத்தை எடுக்கும் சிசிடிவி காட்சிகளை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் மாநகர் முழுவதும் உள்ள காவல்துறையினரிடம் சைக்கோ கொலையாளி இருக்கும் காட்சிகள் அனுப்பப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
சாலையோரம் ஆதரவற்ற நிலையில் இரவில் உறங்கும் முதியவர்கள், குறி வைத்து கொலை செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து செல்லும் சைக்கோ கொலையாளியால் சேலத்தில் பதட்டம் நிலவுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.