ETV Bharat / state

பெரியார் பல்கலைக்கழக கருப்பு ஆடை சர்ச்சை.. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆவேசம்! - Prince Gajendra Babu

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் எழுப்பிய கருப்பு ஆடை சர்ச்சை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு' கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழக கருப்பு ஆடை சர்ச்சை

author img

By

Published : Jun 27, 2023, 9:34 PM IST

சேலம்: பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் எழுப்பிய கருப்பு ஆடை சர்ச்சை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை ஒன்றை இன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ளது. அறிக்கையின் வாயிலாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாலு கூறியதாவது, "பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுதான் தீர்மானிக்க முடியும். காவல்துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் பல்கலைக் கழக அதிகாரி சுற்றறிக்கை அனுப்புவது பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவை சிறுமைப்படுத்தும் செயலாகும்.

'நிறம்' என்ற அறிவியலின் வரையறைக்குள் வெள்ளையும், கருப்பும் வராது. கருத்தியல் புரிதலின் அடிப்படையில் வெள்ளையும் கருப்பும் வெவ்வேறு பொருளில் பார்க்கப்படுகிறது. கருப்புத் தோல் கொண்டவர்களை நாகரீகப் படுத்தும் பொறுப்பு, வெள்ளைத் தோல் கொண்டவர்களுக்கு இருப்பதாக ஐரோப்பியர்கள் கூறிக் கொண்டதை வரலாற்றில் படிக்கின்றோம்.

ஐரோப்பிய காலனி மக்களின் நிறவெறி கருத்தியல்தான் தென் ஆப்பிரிக்காவில் திரு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற வழக்குரைஞரை ரயில் பெட்டியில் இருந்து கீழே இறக்கிவிட்டது. அந்த சம்பவமே வெள்ளையரை எதிர்த்து காந்தியடிகள் போராட்டம் நடத்த காரணமாக அமைந்தது. வெள்ளை நிறவெறிக்கு எதிரான போராட்டமே "மகாத்மா" என்ற புகழை காந்தியடிகளுக்கு பெற்றுத்தந்தது.

ஒரு குழுவில் கருத்தொற்றுமை இல்லாத நபரை "கருப்பு ஆடு" என்று அழைப்பது நிறவெறியின் வெளிப்பாடே. ஒருவரை கரும்புள்ளி அல்லது கருப்பு ஆடு என்று சொல்வது சாதிய கட்டமைப்பு கொண்ட சமூகத்தில், குறிப்பிட்ட நபரை சிறுமைப் படுத்துவதற்கு பயன்படுத்தும் சொல்லாடல்.

இத்தகைய பாகுபாட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தந்தை பெரியார், கருப்புச் சட்டை அணிவதை சமூகநீதிப் போராட்டத்தின் அடையாளமாக்கினார். அவரின் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகம் கருப்பு ஆடை அணிந்து வருவதற்கு தடைவித்திருப்பது மிகப் பெரிய முரணாக அமைந்துள்ளது. பாகுபாட்டைக் களைய கற்றுத்தர வேண்டிய பல்கலைக் கழகம் பாகுபாட்டை ஊக்கப்படுத்துவது ஏற்க இயலாது.

இந்திய அரசமைப்புச் சட்டமும் அதன்படி இயற்றப்பட்ட எந்த சட்டமும் "கருப்பு உடைகள்" சட்ட விரோதமானது என்று தெரிவிக்கவில்லை. சட்டப்படியான எந்த தடையும் இல்லாதபோது, சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிராக பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக் கழகம் திரும்பப்பெற வேண்டும் என்று 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை' கோருகிறது.

பட்டத்தை விட தனி மனித கண்ணியம் மிகவும் முக்கியம். பல்கலைக்கழகம் கருப்பு உடைக்கு விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ளவில்லை என்றால் மாணவர்கள் நிறவெறியை ஊக்கப்படுத்தும் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க வேண்டும்.

"எனது தோல் எந்த நிறமோ அந்த நிறத்தில் நான் உடை அணிவதை அனுமதிக்க மறுப்பது என்னை சிறுமைப்படுத்தும் செயல். எனது கண்ணியத்திற்கு அத்தகைய கட்டுப்பாடு ஏற்புடையதல்ல. வெள்ளை நிறவெறியை அங்கீகரிக்கும் பட்டமளிப்பு விழாவை நான் புறக்கணிப்பேன்" என்று மாணவர்கள் உறுதியுடன் பல்கலைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளை முக்கிய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.