ETV Bharat / state

சேலத்தில் ஐஜேகே நிர்வாகி வெட்டிக் கொலை: 3 பேர் கொண்ட மர்மக் கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு! - இந்திய ஜனநாயக கட்சி

சேலத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

salem
சேலத்தில் ஐஜேகே நிர்வாகி வெட்டிக் கொலை
author img

By

Published : May 16, 2023, 12:12 PM IST

சேலம்: சேலம் மாநகர் அரிசிபாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராமஜெயம், இவரது மகன் உதய சங்கர் (30). வெள்ளி தொழில் செய்து வந்த இவர் இந்திய ஜனநாயக கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், பள்ளப்பட்டி - சூரமங்கலம் பிரதான சாலையில் உள்ள சேலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் எதிரே இருக்கும் கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3 பேர் கொண்ட கும்பலுடன் உதயசங்கர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட மர்மக் கும்பல், அவர்கள் வைத்திருந்த அரிவாளால் உதய சங்கரை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் உதயகுமார் தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் அப்போதும் விடாமல் துரத்திச்சென்று கொடூரமாக வெட்டியுள்ளனர். அந்த சம்பவத்தில் தலை, முகம், கைகள் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் உதயசங்கர் ரோட்டில் சரிந்து விழுந்துள்ளார்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப் பார்த்த அப்பகுதி மக்கள் பதறி அடித்து ஓடியுள்ளனர். அதன் பின்னர் அப்பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டு, போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி போலீசார் உதய சங்கரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட உதய சங்கர், சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த, பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே உதயசங்கர் வெள்ளிக்கட்டி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், அதில் ஜாமீன் பெற்று வெளியே வந்த உதய சங்கர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் உதயசங்கருடன் இருந்த நண்பர் அலெக்ஸ் பாண்டி என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி) நிர்வாகி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவம்:“தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை”... அமைச்சர் சி.வி.கணேசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.