சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொர்ணபுரி, போயர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் சௌதிஷ் (8). நேற்று (நவ.16) காலை 6 மணிக்கு விளையாட சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லையென காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் பள்ளப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, உடனடியாக விசாரணை நடத்தி அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்படி சேலம் தெற்கு போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஆர். பாரதி என்பவர் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் பணியில் இருந்த போது அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சிறுவனிடம் விசாரித்தார். அதில், காணாமல் போன சிறுவன் என்று தெரியவந்தது. உடனடியாக சிறுவனை மீட்ட பாரதி, பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் ரமேஷிடம் ஒப்படைத்தார்.
பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் குழந்தையின் பெற்றோரை வரவழைத்து சிறுவனை ஒப்படைத்து குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர்.
இதையும் படிங்க: தேர்வுக்கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரிய மனு தள்ளுபடி!