ETV Bharat / state

மூடப்பட்ட குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா 7 மாதத்திற்கு பிறகு திறப்பு! - சேலம் செய்திகள்

சேலம்: ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, 7 மாதத்திற்கு பின்னர் இன்று முதல் சுற்றுலா பயணிகள் வருகைக்காக திறக்கப்பட்டது.

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா
author img

By

Published : Nov 12, 2020, 3:18 AM IST

சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத் தொடர் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா தமிழ்நாடு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இங்கு மயில் மற்றும் பறவைகள், புள்ளிமான், கடமான், குரங்குகள், நரி மற்றும் முதலை, உடும்பு, மலைப்பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்கள் தனித்தனி கூண்டுகளில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

அவற்றை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேரில் வந்து கண்டு களித்து செல்வர். உலக அளவில் கரோனோ வைரஸ் தொற்று ஏற்படுத்திய தாக்கம் காரணமாக கடந்த 7 மாத காலமாக இந்தப் பூங்கா மூடப்பட்டது.

இதனிடையே, வன உயிரியல் பூங்காக்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததால் (11.11.2020) நேற்று காலை பூங்கா திறக்கப்பட்டது. இது குறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் கூறுகையில், " உயிரியல்
பூங்காவிற்கு வருபவர்கள் கால்களை கிருமி நாசினி தெளிக்கப்பட்ட தண்ணீரில் கழுவிய பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். முக கவசம் அணியாதோர் பூங்காவிற்குள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

பூங்காவுக்குள் நுழைந்ததும் பொதுமக்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதனால் இனி பூங்காவுக்கு வருபவர்கள் தகுந்த இடைவெளி விட்டு செல்ல வேண்டும். பூங்காவில் அமரும்போதும் தகுந்த இடைவெளி விட்டு அமர வேண்டும்.

முக்கியமாக, 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பூங்காவிற்குள் செல்ல அனுமதி இல்லை. பூங்கா தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.