உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அலுவலகத்தில் தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் எனச் சொல்லி மகிழ்ந்தனர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிக்கவுண்டர், ஊராட்சி செயலர் பாஸ்கரன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: ஈஷா யோகா மையம் சார்பில் கொண்டாடப்பட்ட மாட்டுப் பொங்கல்